குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் முஸ்லிம் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமென பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ரோஹினிய முஸ்லிம்கள் பங்களாதேஸில் புகலிடம் பெற்று வருகின்றனர். பங்களாதேஸில் புகலிடம் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் முயற்சியைத் தடுக்க அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
பாப்பாண்டவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட போது ரோஹினிய முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக ரான்கீன் மாநில அகதிகள் என்ற சொற் பதத்தையே அவர் பயன்படுத்தியிருந்தார். அகதி முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.