Home உலகம்ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

by admin

ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில்  இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் அச்சமடைந்த  பொதுமக்கள்   வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்   தெரிவித்துள்ளது.    மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், கடுமையான சேதம் ஏற்படும் என்ற போதிலும்  ம், உயிரிழப்போ சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More