உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பி.ஜே.பி. முன்னிலையில் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் 14 இடங்களில் பி.ஜே.பி. முன்னிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன..
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று ஆரம்பமாகி உள்ளது. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய திகதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
ஒரு சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை தவிர, உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.