Home பிரதான செய்திகள்சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வு

by admin

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அறிவித்துள்ளார்.

40 வயதான சயீத் அஜ்மல்   35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி    178 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்;. அத்துடன் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி  184 விக்கெட்களையும், 64 இருபதுக்கு இருபது  போட்டிகளில் 85 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
2014-ம் ஆண்டு இலங்கையில்; இடம்பெற்ற  கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் அவரது   பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட்  கட்டுப்பாட்டுசபை முறையிட்டதனைத் தொடர்ந்து    அஜ்மல்   அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More