சீரக்க காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கடுமையான காற்று மற்றும் பலத்த மழையினால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இதில் 694 வீடுகள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு:-
02.12.17
சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது