Home இலங்கைமஹிந்தவுக்கு முன்னாள் போராளிகள் நன்றிக்கடன் செலுத்தவுள்ளனரா?

மஹிந்தவுக்கு முன்னாள் போராளிகள் நன்றிக்கடன் செலுத்தவுள்ளனரா?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கட்சியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் வட மாகாண அமைப்பாளரும், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சருமான எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளே இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நாட்டில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பில் தெளிவடைந்த இந்த முன்னாள் போராளிகள், பொதுஜன முன்னணியில் போட்டியிட விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர்களுடன் இணைந்து போட்டியிட வடக்கின் சிங்கள மற்றும் தமிழர்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More