Home இலங்கைகூட்டு எதிரணியின் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

கூட்டு எதிரணியின் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

by admin

கம்பளை நகர சபையின் முன்னாள் நகர சபை தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி இன்று   ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
அவர் ஜனாதிபதியினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிப்பட்டுள்ளதுடன், அதற்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார். சரத் காமினி ஹெட்டியாரச்சி கடந்த சில வருடங்களாக கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட்டுவந்த உறுப்பினராவார்.

இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 புதிய அமைப்பாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More