குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கலப்பு முறையில் முதன் முறையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 60 வீதமான உறுப்பினர்கள் தொகுதிவாரி அடிப்படையிலும், 40 வீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர். இந்த முறைமை குறித்து வாக்காளர்களை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் தனித்தனியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 5.5 பில்லியன் ரூபா தேர்தல்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 3.5 பில்லியன் ரூபா உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.