Home இலங்கைலசந்த கொலை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை :

லசந்த கொலை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யுனெஸ்கோவின் ஊடகவியலாளர் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு ஊடகங்கள் ஊடக உரிமைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனவா என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.
யுனெஸ்கோ மாநாட்டில் சொற்ப அளவிலான ஊடகவியலாளர்களே பங்கேற்றுள்ளனர் எனவும், இதன் மூலமே ஊடகவியலாளர்கள் ஊடக உரிமை ஊடக சுதந்திரம் பற்றி கருதுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர்   தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More