Home இந்தியா2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி அறிவிக்கப்படும்….

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி அறிவிக்கப்படும்….

by admin

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக முறைப்பாடு எழுந்ததனையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தயாராக காலதாமதம் ஆனதால் தீர்ப்புத் திகதி டிசம்பர் 5- ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி 2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More