145
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிக காற்றுடனான காலநிலையினால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என காலநிலை அவதான நிலையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கையினை மீறி கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற 25 மீனவர்கள் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 25 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்றையதினம் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது எச்சரிக்கையினையும் மீறி கடலுக்குச் சென்ற குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜே.அலெக்ஸினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love