24
காலி பிரதேசத்தில் இன்று காலை மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த கடையின் பாதுகாவலர் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற அவர்கள் தீயிணை கட்ப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயணைப்பு படையினர் வருவதற்குள் இரண்டாவது மாடிக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
Spread the love