இலங்கை சென்றுள்ள எதேச்சதிகாரமான தடுப்புக்காவலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா தூதுக்குழு வடக்கு, கிழக்கு மற்றும் மலையத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடந்த திங்கட்கிழமை அலங்கைக்கு வருகைதந்த மூவரடங்கிய இந்தத் தூதுக்குழு, எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருக்கும். இந்தக் குழுவில், ஜோஸ் அன்டோனியோ குவாவர பெர்முடஸ், லே டூமீஸ் மற்றும் எலினா ஸ்டீனேர்ட் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை வந்துள்ள மேற்படி குழு அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய தரப்பினரையும் இலங்கை பூராவும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இந்தக் குழு, இலங்கைப் hயணம் தொடர்பிலான தன்னுடைய இறுதி அறிக்கையை, ஐ.நா மனித உரிமை பேரவையில், 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கையளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது