குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கூட்டமைப்பில் பங்காளி கட்சிகளாக உள்ள நாம் பிரிந்து தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் அதிக ஆசனங்களை பெறமுடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில். நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பில் உள்ள தமிழரசு கட்சி, ரெலோ மற்றும் புளெட் ஆகியன பிரிந்து நின்று மூவரும் தனித்தனியாக கேட்டால் ஆசனங்களை அதிகமாக பெறலாம். தற்போது உள்ள தேர்தல் நடைமுறையில் கூட்டமைப்பாக கேட்பதை விட தனித்தனியாக கேட்டால் நல்லது. ஆனால் அது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும். அத்துடன் வேட்பாளர்கள் இடையில் அசமந்த போக்கு ஏற்படும் அதனால் அதுபற்றி யோசிக்க வில்லை. என தெரிவித்தார்.