எவர் பிரிந்து சென்றாலும் , எவர் தனித்து நின்று செயற்பட்டாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு என ஆபத்தும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில். நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
யார் பிரிந்து சென்று தனித்து நின்று செயற்பட்டாலும் , எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழரசு கட்சியிடம் 11 ஆசனங்கள் உண்டு. எமக்கு அடுத்ததாக உள்ள மக்கள் விடுதலை முன்னணியிடம் 06 ஆசனங்களே உள்ளன. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி எப்போதும் கேள்விக்குறி ஆகாது. என தெரிவித்தார்..