ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் தலைமை தெளிவானதொரு முடிவை எடுக்காவிடின் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடபோவதில்லை என புளோட்டின் வடமாகாண சபை அமைச்சர், சிவநேசன் தெரிவித்துள்ளார்.
ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இதனால் கூட்டமைப்பின் பங்காளியான புளொட் கூட்டைமைப்பில் இருந்து வெளியேறாவிடினும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நடவடிக்கை எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.