188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் சிங்களமயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க யாழில் இருந்து சென்ற எட்டு ஊடகவியளாலர்களை அச்சுறுத்தி அவர்களின் புகைப்படகருவியில் இருந்த புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் என்பன அழிக்கப்பட்டது.
அது தொடர்பில் இராணுவ பேச்சாளர் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு இராணுவ தளபதியிடம் விசாரித்த போது , இராணுவத்தினருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும், சிவில் உடையில் அங்கு இராணுவத்தினர் செல்லவில்லை. அந்த இடத்தில் சிவில் உடையில் நிற்பவர் இராணுவத்தை சேர்ந்தவர் இல்லை எனவும் தெரிவித்தார்.
எனவே அந்த சம்பவத்திற்கும் இராணுவத்தினரும் எந்த தொடர்பில்லை என உறுதிபட தெரிவிக்கிறேன் என மேலும் தெரிவித்தார். அதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை. அவர்களே தமது புகைப்படகருவிகளில் இருந்த புகைப்படங்களை அழித்தனர். சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.
Spread the love