Home இந்தியா 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை -2021-ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில்

2023-ம் ஆண்டு உலகக்கோப்பை -2021-ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில்

by admin

2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை சிறப்பு பொதுக்கூட்டத்தில் உறுதி செய்துள்ளது. 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா ஏனைய நாட்டு வாரியங்களுடன் சேர்ந்தே நடத்தியிருந்த நிலையில்  முதல் முறையாக  2023-ல் முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டியை நடத்தவுள்ளது

அதேபோல் 2021 சம்பியன்ஸ் கிண்ணத் தொடரும் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019-20-ல் ஆப்கானுடன் இந்திய அணி இந்தியாவில்  டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.  இந்தவகையில்   2019-23-ம் ஆண்டு காலப்பகுதியில்  இந்திய அணி 81 போட்டிகளில் உள்நாட்டில்  விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More