Home இலங்கைமுல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின…

முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின…

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் மு.வரதராஜா ஆகியோரினால் நேற்று நண்பகல் அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய தேசிய கட்சி இன்று செலுத்தியுள்ளது




ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்துஇன்று கட்டுப்பணத்தினை செலுத்தினார்


.

இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் இவர்கள் தமது கட்சி சார்பில் கட்டுப்பணத்தினை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொண்டனர்.

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியானது இன்று 12.12.2017 செவ்வாய்கிழமை,  முற்கபகல் கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கிளிநொச்சி மாவட்ட தேர்தல்  செயலகத்தில்  வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ் எம் ரஞ்சித் சமரகோண் தலைமையில் கரைச்சி பிரதேச சபைக்கான  கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப் பணம்  செலுத்தப்பட்டுள்ளதகாவும், ஏனைய இரண்டு பிரதேச சபைகளுக்கும் செலுப்படும் எனவும்  அவா்  தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More