Home இலங்கைசாவகச்சேரி நகர சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பு மனு தாக்கல்

சாவகச்சேரி நகர சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பு மனு தாக்கல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று பிற்பகல் 2.15 மணியளவில் கையளித்தது. சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட முதலாவதாகக் கட்டுப் பணத்தைச் செலுத்திய அந்தக் கட்சி, வேட்புமனுவையும் முந்திக்கொண்டு கையளித்தது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனுவைக் கையளித்தார். கட்சியின் உறுப்பினர்களும் மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்திருந்தனர். இதேவேளை, வேட்பு மனுவை ஆராய்ந்தே அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல்கள் செயலகம் அறிவிக்கும் எனத் தெரியவருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More