181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.மாநகர சபையில் 29 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய பெண்ணொருவர் 29 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார். இதுவரை அவருக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அதற்கு காரணம் மாநகர சபையில் குறித்த பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயர் பதவியில் உள்ளமையே காரணம் என எனக்கு தெரிவித்துள்ளார்கள். அவரே அந்த பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் பாதுகாத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்டால், அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கபப்ட்டு உள்ளது அவர்கள் விசாரணை செய்வார்கள் என தெரிவிக்கின்றார்.
பொலிசாருக்கு அறிவித்து விட்டு நாம் எதுவும் கதைக்காமல் இருந்தால் பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் , பொலிசாரிடம் அது பற்றி நாம் விசாரிக்க வேண்டும். என்றால் தான் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். என தெரிவித்தார்.
Spread the love