Home உலகம் அலபாமா தேர்தல்: டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி – ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி…

அலபாமா தேர்தல்: டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி – ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி…

by admin

அமெரிக்காவின்  அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில். குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூரேவுக்கு ஜனாதிபதி  டிரம்ப் ஆதரவளித்த நிலையில், டக் ஜோன்ஸின் எதிர்பாராத வெற்றி, டிரம்பிற்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது. நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இதனை மூரே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ராய் மூர் தாம் 14 வயதாக இருக்கும்போது தம்மை மயக்கி பாலியல் ரீதியாக தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவந்தார்.

அலபாமா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மூருக்கு தற்போது வயது 70. கிறிஸ்துவப் பழமைவாதியான இவர், ஓரினச்சேர்க்கை நடவடிக்கை சட்டவிரோதமாக இருக்க வேண்டும் என கருதுவதாக கூறியவர்.

இவருக்கு எதிராக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே அணி திரண்டனர். இவர் தேர்ந்தெடுக்கப்படுவதை அவரது சொந்தக் கட்சியினரே விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More