ஈரானில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் வீடுகள் விரிசலடைந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்கிழக்கு ஈரானின் கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில நில நடுக்கம் பதிவாகியிருந்தது. சுமார் 57 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு காரணமாக சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் காயம் அடைந்திருந்தனர்.
நேற்று முன்தினமும் மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஈரானில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 530 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

