விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட, ஏழு முன்னாள் போராளிகளுகளும், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த ஏழு பேருக்கும் தலா 56 ஆண்டுக்கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி வைத்தியர் உட்பட ஏழு தேசிய சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் மீது கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகி இருந்தமை