இலங்கை பிரதான செய்திகள்

கூட்டு எதிரணி – ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் இணைவு

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அநுர குருப்பு மற்றும் முன்னாள் உப தலைவர் எல். டி விஜேவர்தன ஆகியோர் இன்று  முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று  ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அவர்கள் இதுவரை கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.  ஜனாதிபதி   நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இப்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களான தெஹியோவிட்ட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோமஸ் சமிந்த மற்றும் தெரணியகல ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்றுச் சபையின் செயலாளர் ஏ.வீ. பியரத்ன ஆகியோரும் இன்று   ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று   ஜனாதிபதி   முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • Minister of Health (NP) is the culprit though he very well know that any contaminated or infected theater should be immediately sealed and checked for any bacterial contamination or malpractice of theater staff.
    But he has given enough time to camouflage every thing. Suspicion arise whether he connived with this hospital management to aid them to escape from law of this land
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers