உலகம் பிரதான செய்திகள்

கையடக்கத் தொலைபேசிக்காக சிறுமியுடன் உறவு – வாலிபருக்கு சிறை

சிங்கப்பூரில் கைபேசி வாங்க உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.    சிங்கப்பூரில்,  14 வயதுடைய பாடசாலை  மாணவி புதியரக கையடக்கத் தொலைபேசியை வாங்குவதற்கு ஆசைப்பட்ட நிலையில்  தனது நட்புக்களிடம் உதவிகேட்டு சமூக வலைத்தளத்தில்  விருப்பத்தையும் பதிவுசெய்திருந்தார்..

இந்தப் பதிவையும், சிறுமியின் விருப்பத்தையும் அறிந்துகொண்ட  அதே பகுதியில்  வசிக்கும்  ஹரி குமார் அன்பழகன்   என்னும் இளைஞர் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் அந்த சிறுமியை நேரில் சந்தித்துள்ளார்.  தான் கையடக்கத் தொலைபேசி வாங்க 70 டொலர் பணம் தருவதாகவும்,. பதிலுக்கு, தனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் எனவும் கோரியுள்ள நிலையில் அதற்கு இணங்கிய சிறுமி  இளைஞரின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார். எனினும் வாக்குறுதி அளித்தபடி பணத்தை கொடுக்காமல் ஹரி குமார் அன்பழகன்    சிறுமியை ஏமாற்றிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நடவடிக்கைகளில் புதிய மாற்றத்தை உணர்ந்த பாடசாலை மாணவர்கள், மற்றும்  ஆசிரியர்கள் காவற்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் இடம்பெற்றன. இதன் அடிப்படையில்  அந்த மாணவியின் கைபேசியில் இருந்த அழைப்பு எண்கள் மற்றும் குறுந்தகவல்களை ஆய்வு செய்த காவற்துறை ஹரி குமாரை  கடந்த ஆண்டு கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில்,
18 வயதை அடையாத பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் குற்றவாளி ஹரி குமார் அன்பழகனுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி கென்னத் யாப் நே தீர்ப்பளித்துள்ளார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.