குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சு செயலாளர்கள் நியமனம் தொடர்பில் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அமைச்சுக்களின் செயலாளர்களை நியமித்துள்ளார். அமைச்சர்களின் ஆலோசனை கேட்காமலேயே இவ்வாறு அமைச்சர்களை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடித்துறை நீரியல் வளம், சட்டம் ஒழுங்கு, முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால்துறை , நீதி, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்ட சில அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் சில முக்கிய அமைச்சர்களளின் செயலாளர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.