இலங்கை பிரதான செய்திகள்

தேர்தல் + வேட்புமனு + தமிழரசுக்கட்சி + ஏமாற்று + குத்து வெட்டு = கூட்டமைப்பு:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்ப நிலையால் இறுதி நேரத்திலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு  வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.  சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  இன்று வியாழக்கிழமை மதியம் 12மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்நிலையில் இறுதி நாளான இன்று காலை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்பட்டியல் நிரப்ப பட்டு வேட்பாளர்கள் கையொப்பம்மிட அழைக்கப்பட்டு இருந்தனர்.

 
வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கம். 
ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் தமிழரசு கட்சியால் தீர்மானிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் வேட்பு மனுவில் நீக்கப்பட்டு புதியவர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டு இருந்தது.
அதனால் ஏற்கனவே பெயர் கொடுத்து வேட்பு மனுவில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் நிஜாயம் கேட்டு முரண்பட்டு உள்ளனர்.
அதன் போது , குறித்த பட்டியலை க.அருந்தவபாலன்  மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோரே தயாரித்தனர். இறுதி நாளில் இறுதி நேரத்தில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துவது நல்லதில்லை என கூறியுள்ளார்.
சமரச பேச்சு.
தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தமது பெயர் நீக்கப்பட்டமையால் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு , அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நேரம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய இருந்த சமயத்தில் மதியம் 11 மணி வரையில் நடைபெற்ற பேச்சுக்களில் இணக்கம் ஏற்படவில்லை.
இரகசிய முறையில் வேட்பு மனு தயாரிப்பு. 
கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று தமக்குள் வாக்குவாதப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நேரம் நெருங்கியமையால் , மாவை சேனாதிராஜா மற்றும்  எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சி அலுவலகத்தில் இரகசியமான முறையில் வேட்பு மனுவை தயாரித்தனர்.
இதனை அவதானித்த அருந்தவபாலன் மற்றும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் சென்று மீண்டும்  முரண்பட்டனர்.
தமிழரசு கட்சியின் உச்சகட்ட துரோகம். 
இது தமிழரசு கட்சி தமக்கு செய்யும் உச்சக்கட்ட துரோகம், மனட்சாட்டி இல்லாமல் கட்சி நடந்து கொள்ளுகின்றது. தங்களை வேண்டுமேன்றே கட்சி ஏமாற்றுவதாகவும் மாவை சேனாதிராஜா முன்பே நேரடியாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிய மாவை. 
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி நேரத்தை நெருங்கி விட்டது. தாக்கல் செய்யாவிட்டால், கட்சிக்கு பெருத்த அவமானத்தினை கொண்டுவரப்போவதாக கூறி ஆத்திரமடைந்த மாவை சேனாதிராஜா தன் இதில் தலையிட வில்லை என்று கூறி கோபத்துடன் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
அதன் போது மாவை சேனாதிராஜாவை சமாதனப்படுத்தும் முயற்சியில்  ஒருவர் ஈடுபட்ட போதும், அவரை ஒன்றும் பேச வேண்டாம் என கூறி தள்ளிவிட்டு மாவை சேனாதிராஜா வாகனத்தில் ஏறி அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
முரண்பட்டவர்களும் வெளியேறினார்கள். 
மாவை சேனாதிராஜா அங்கிருந்து வெளியேறிய போதும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேட்பாளர் பட்டியலை தயாரித்தார்.  இதனால் ஆத்திரமடைந்த அருந்தவபாலன் அணியினரும் அங்கிருந்து வெளியேற ஆயத்தமானார்கள்.
ஓடிக்கொண்டு இருக்கும் காரின் கதவை திறந்த மாகாண சபை உறுப்பினர். 
வேட்பாளர் பட்டியலில் உறுப்பினர்களுடைய பெயர் விபரங்கள் நிரப்பப்பட்ட போதும்,  தொகுதிக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வாகனத்தில் (காரில்) புறப்பட்ட அருந்தவபாலன் அணியினரை வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் வீதியில் வைத்து மறித்திருந்தார்.
இருப்பினும் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்த போது கே.சயந்தன் ஓடிக் கொண்டிருந்த வாகன கதவினை திறந்து, அவர்களை வருமாறு கேட்டிருந்தார். அதற்கு மறுப்புச் சொன்ன அருந்தவபாலன் அணியினர் அங்ருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
வாகன சாரதியை வேட்பாளராக்க முயற்சி. 
இதன் பினர் சாவகச்சேரியில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த  வாகனத்தின் சாரதியை அப் பட்டியலில் கையெப்பமிடுமாறு அழைத்துச் சென்ற போதும், வேறு ஒரு கட்சி உறுப்பினர் அங்கு வந்த காரணத்தினால் சாரதி வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை.
15 நிமிடங்களுக்கு முன்பு வேட்பு மனுத்தாக்கல். 
இவ்வாறு வேட்பாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு இடையில் நடைபெற்ற முரண்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அவசர அவசரமாக வாகனத்தில் ஏறிய அவர்கள்  நண்பகல் 11.45  மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் ஆலுவலகத்திற்குச் சென்று தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • தேர்தல் + வேட்புமனு + தமிழரசுக்கட்சி + ஏமாற்று + குத்து வெட்டு = கூட்டமைப்பு = “சமந்த + சுமந்த + மாவ” குழுவ.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers