Home இலங்கைபுகையிரத விபத்தில் இரண்டு பேர் பலி

புகையிரத விபத்தில் இரண்டு பேர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேறுவேறு இடங்களில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த இரண்டு விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன. மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணம் செய்த புகையிரதத்தில் மோதுண்ட இனந்தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பம்பலப்பிட்டியில் வைத்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஹபராதுவ காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட தல்பே வடக்கு புகையிரத பாதையின் புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்றும் புகையிரதமும் மோதிக் கொண்டதில் இந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறையிலிருந்து காலி நோக்கிப் பயணம் செய்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More