163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை மூடுவது பொருத்தமான தீர்வாக அமையாது என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தை மூட வேண்டுமென விமான சேவை நிறுவனத்தின் சில தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும், இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த கால கடன்கள் காரணமாகவே நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love