குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து உதவி தேவைப்படாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம் பற்றி பாடம் கற்பித்துக் கொடுத்தாலும் அந்த நாடுகளில் நல்லிணக்கம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் பிரித்தானியாவும் அந்த நாடுகளின் எண்ணக்கருக்களை வேறு நாடுகளில் விதைக்கப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவின் ட்ராம்பின் கொள்கையானது கடுமையான இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.