குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுவதாக ஈ..பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தமது கட்சி மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்கள் தமக்கு எதிராகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தமிழ் பத்திரிகைகளின் கொள்கைகளுக்கு முரணான வகையில் தாம் ஒரு தனிப்பத்திரிகை நடத்தி வருவதனால் இவ்வாறு தம்மீது குற்றம் சுமத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். லசந்த கொலை மற்றும் சில தமிழ் அரசியல்வாதிகள் கொலை தொடர்பில் தம்மீது தமிழ் ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த கொலைகளுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என நிரூபணம் ஆகியுள்ளதாகத்தெரிவித்துள்ளார். தொடாச்சியாக பொய்கள் கூறுவதனால் பொய் உண்மையாகின்றது எனவும் அதுவே தமது விடயத்தில் நடந்தேறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காக தொடர்ச்சியாக சேiவாயற்ற நினைத்தமையே தமது பிரதான பலவீனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.