132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு விசேட பொறிமுறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாள்தோறும் 20 வழக்குகளை விசாரணை செய்வதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் நோக்கில் இவ்வாறு விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டடோரை தண்டிப்பது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் கலந்தாலோசனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love