மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இனி வரும் காலங்களில் விளையாடக்கூடிய சாத்தியமில்லை என பிரபல வீரர் டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார். டுவன்ரி20 கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். 20016ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஸ் போட்டிகளின் போது பிராவோ உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.
இந்த உபாதையினால் பிராவோ நீண்ட காலமாக போட்டிகளில் பங்கேற்காத நிலைமை காணப்பட்டது. தாம் விளையாடடிக்கூடிய உடற் தகுதியுடனும், இளமையுடனும் இருந்த காலத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வாரியம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும், தற்போது மீளவும் அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது என்பது நடைமுறைச்சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.