Home இலங்கைஹொரண பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு கொள்ளை

ஹொரண பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு கொள்ளை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹெராண பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தயாரிக்கப்பட்ட வேட்பு மனுக்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை கொள்ளையிட்டவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.

தமது பெயர் வேட்பு மனுப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு வேட்பு மனு தயாரிக்கப்பட்டிருந்த ஆவணத்தை கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனு குறித்த ஆவணத்தை பேணிப் பாதுகாத்து வந்த நபரை தாக்கி இந்த ஆவணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More