Home பிரதான செய்திகள்ஆஷஸ் தொடர் அவுஸ்திரேலிய வசமானது

ஆஷஸ் தொடர் அவுஸ்திரேலிய வசமானது

by admin

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், முதலாவது, இரண்டாவது போட்டிகளில் வெற்றியீட்டியிருந்த அவுஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும்   வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை , பேர்த்தில் ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஐந்தாம் நாளான இன்று அவுஸ்திரேலியா வென்றுள்ளது. மழை காரணமாக, ஆடுகளம் ஈரமாகக் காணப்பட்டதனால், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் மதிய உணவு நேர இடைவேளைக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்ட இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இப்போட்டியின் நாயகனாக, 239 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவானார்.

இதன்மூலம் இங்கிலாந்தில் வைத்து 2015ஆம் ஆண்டு இழந்த ஆஷஸை, இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More