சினிமா பிரதான செய்திகள்

அருவி மிகச் சிறந்த படம் – அனைத்தையும், அனைவரையும் தோலுரித்துக் காட்டியுள்ளது


அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் அருவி படத்திற்கு இயக்குநர் சங்கர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சேர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை அருவி திரைப்படம் பெற்று வருகின்றது.

கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதீதி பாலனின் நடிப்புக்கும், திருநங்கை அஞ்சலி வரதனின் கதாபாத்திரத்துக்கும் படத்தின் இயக்குனருக்கும் பல்வேறு இயக்குநர்கள் உட்பட திரையுகைச் சேர்ந்த பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் சங்கரும் அவரது டுவிட்டரில் அருவி மிகச் சிறந்த படம் எனவும் அனைத்தையும், அனைவரையும் தோலுரித்துக் காட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், நாயகி அதிதி பாலன் உள்ளிட்ட அனைவரது நடிப்புமே சிறப்பு எனவும் சங்கர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இயக்குனர் சுசீந்திரன், கார்த்திக் நரேன், நடிகர்கள் கார்த்தி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் அருவி படத்திற்கும், படக்குழுவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply