Home உலகம்ஜெருசலேம் தொடர்பில் ஐ.நா. சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்துள்ளது.

ஜெருசலேம் தொடர்பில் ஐ.நா. சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்துள்ளது.

by admin


இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமினை அறிவித்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்துள்ளது.  ஜெருசலேமினை இஸ்ரேல் தலைநகரமாக டிரம்ப் கடந்த 6ம் திகதி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலஸ்தீனத்தில் போராட்டம் மற்றும் மோதல் காரணமாக 4 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஜெருசலேம் நகரின் எதிர்காலம் தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் தெரிவித்திருந்தார்.

இநத்நிலையில், இன்று இடம்பெற்ற ஜெருசலேம் பிரச்சனை குறித்து விவாதிக்க 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய ஐ.நா.சபைக்கான சிறப்பு தூதர் நிக்கி ஹாலே குறித்த ; தீர்மானம் அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றதாகும்.  எனவே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் தங்களது முயற்சிகளை தொடரவும், தங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ளும் வகையிலும் இந்த தீர்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா நிராகரிக்கின்றது’ எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More