205
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளின் சம்பளம் இவ்வாறு உயர்த்தப்பட உள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரளவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதவான்கள் முதல் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வரையில் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளது. எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.
Spread the love