சினிமா

தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கோரி மனு தாக்கல்


பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து  விவாகரத்து  பெற சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி, நம்ம வீட்டு கல்யாணம், கொபி வித் டிடி போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.

டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டிடிக்கும் அவரின் கணவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதனால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply