Home உலகம்மெக்சிகோவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை-

மெக்சிகோவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை-

by admin

மெக்சிக்கோவின் வேராகுரூஸ் மாநிலத்தைச் சேர்ந்த, 35 வயதுடைய பத்திரிகையாளரான குமாரோ பெரஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.
நேற்று இரவு அகேகான் நகரில் தன் மகன் படிக்கும் பாடசாலையில் நடந்த கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்ற போது விழா நடந்த வகுப்பறைக்குள் நுழைந்த இனம்தெரியாத ஒருவர், பேரஸை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பின் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் பெரஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மெக்சிகோவில் செயல்படும் சர்வதேச போதை கடத்தல் குழுவை ஒடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நிலையில் போதைக் குழுவைச் சேர்ந்த ஏராளமானோர், காவற்துறையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
எனினும் அந்த குழுவை முழுமையாக ஒடுக்க முடியாத நிலை தொடரும் நிலையில் வன்முறையும், சட்டம் ஒழுங்கின்மையும் தொடர்வதுடன் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் போதை கடத்தல் குறித்து பெரஸ் தொடர்ந்து எழுதி வந்ததால், அவரை போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரே சுட்டுக் கொன்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது

இந்த தாக்குதலுக்கு மெக்சிகோவுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட்டா ஜேக்கப்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை கொலை செய்வதன் மூலம் உண்மையை கொன்றுவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மெக்சிகோவில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 111 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More