166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்க ஜனாதிபதி பிரகடனம் செய்தமை குறித்து இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை நகர மண்டபத்திற்கு அருகாமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தப் போராட்டத்தில் டொக்டர் ராஜித சேனாரட்னவும் பங்கேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜே.வி.பி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love