நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து இன்று விடுதலையானார். சென்னை உயர்நீதிமன்றில் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் ஏனைய நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி விமர்சித்ததால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னரும் அவர் நீதிபதிகள் பற்றி அவதூறாக கருத்து கூறியதால் அவர் மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்த வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கர்ணன் ஒரு மாத தேடு:தலின் பின்னர் கைது செய்யப்பட்டு கொல்கத்தா நகரில் உள்ள பிரசிடென்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் தண்டனை காலம் முடிந்து இன்று கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது