163
வவுனியா – கனேசபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கனேசபுரம் – 40 வீட்டுப் பகுதியிலுள்ள தற்காலிக குடியிறுப்பு ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மின்சாரக் கோளாறே இதற்குக் காரணம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் வீட்டிலிருந்த பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love