177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாளான இன்று(21) கிளிநொச்சியில் ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான சென்ற குழுவினரும், ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக வைத்தியர் விஜயராஜன் தலைமையிலான குழுவினரும், ஈபிடிபி சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் தலைமையிலான அணியினரும் மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
Spread the love