181
பாகிஸ்தானில் வீதியோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது பேருந்து ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் நிலவிய பனி மூட்டமே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Spread the love