Home உலகம்இந்த ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கட் வீராங்கனையாக எல்லி பெரி தெரிவு

இந்த ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கட் வீராங்கனையாக எல்லி பெரி தெரிவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கட் வீராங்கனையாக எல்லி பெரி ( Ellyse Perry) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனையாக இந்த ஆண்டின் சர்வதேச கிரிக்கட் பேரவையின் மிகச் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸஸ் டெஸ்ட் போட்டியில் எல்லி பெரி ஆட்டமிழக்காது 213 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் விக்கட் காப்பாளர் பெத் மூனி ( Beth Mooney ) இந்த ஆண்டின் டுவன்ரி20 போட்டி வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகச் சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனையாக அமி சட்டர்வைற் ( Amy Satterthwaite ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமி சட்டர்வைற் 24 போட்டிகளில் 1183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More