குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
அமெரிக்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அறிவித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு இலங்கை வாக்களித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. தமக்கு எதிராக வாக்களித்தால் நிதி உதவிகள் நிறுத்தப்படும் என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் இலங்கை அமெரிக்காவிற்கு எதிராகவே வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பின் போது அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக 128 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 9 வாக்குகள் அளிக்கப்பட்டன. 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.