யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையொன்று வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர்களால் கடந்த 20ம் திகதி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையே இவ்வாறு வெற்றியளித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையே இவ்வாறு வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நபர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் நலமாக இருப்பதாக யாழ்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது