Home இலங்கை11 இளைஞர்கள் காணாமல் போனமை – கடற்படையின் முன்னாள் பேச்சாளரின் விளக்க மறியல் நீடிப்பு

11 இளைஞர்கள் காணாமல் போனமை – கடற்படையின் முன்னாள் பேச்சாளரின் விளக்க மறியல் நீடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தசநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தசநாயக்க உள்ளிட்ட ஆறு பேரின் விளக்க மறியல் காலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி வரையில் நீடிக்குமாறு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இந்த தமிழ் இளைஞர்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More